Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நரேந்திர மோடியின் அடுத்தடுத்த வெளிநாடு பயணம் தேதி அறிவிப்பு!

பிரதமர் நரேந்திர மோடி இம்மாத இறுதியில் நெதர்லாந்து மற்றும் போர்ச்சுகல் நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

மோடி

இந்தியாவின் 14-வது பிரதமராகச் செயல்பட்டு வரும் மோடி, பதவியேற்றது முதலே பல நாடுகளுக்கு பயணம் சென்று வருகிறார். இதுகுறித்த விமர்சனங்களும் பல தரப்பிலிருந்து முன்வைக்கப்படுகிறது. அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மோடி, ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு சென்றார். நாட்டின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்த பயணங்களில் கையெழுத்தாகின.

இதனிடையே பிரதமர் மோடி அடுத்த பயணமாக மீண்டும் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லவுள்ளார். வரும் ஜூன் 24-ம் தேதி அவர் போர்ச்சுகல் நாட்டுக்குச் செல்கிறார். இதையடுத்து ஜூன் 27-ம் தேதி மோடி நெதர்லாந்துக்குச் செல்கிறார்.  இதனிடையே அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அழைப்பை ஏற்று வரும் 26-ம் தேதி, பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார். ஹெச் 1பி விசா விவகாரம் உள்ளிட்ட அமெரிக்காவுடன் தொடர்புடைய பிரச்னைகள் இந்தச் சந்திப்பில் பேசப்படலாம் என்று கூறப்படுகிறது. 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close