Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சீதாராம் யெச்சூரியைச் சந்தித்த பா.ஜ.க தலைவர்கள்! போட்டியின்றித் தேர்வாகிறாரா அடுத்த ஜனாதிபதி?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியை, பா.ஜ.க தலைவர்கள் அமித் ஷா மற்றும் வெங்கைய நாயுடு சந்தித்தனர்.

sitaram yechury

ஜூலை மாதத்துடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் 14-ஆம் தேதி முதல் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே பா.ஜ.க சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை. மேலும் பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு வேட்பாளரை நிறுத்தவிருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் பா.ஜ.க மூத்த தலைவர்கள் அமித் ஷா மற்றும் வெங்கைய நாயுடு, ராஜ்நாத் சிங் ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியை இன்று சந்தித்தனர். அப்போது குடியரசுத் தலைவர் தேர்தலில், போட்டியின்றி தேர்ந்தெடுக்க பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது பற்றி விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனிடையே இன்று அமித் ஷா மற்றும் வெங்கைய நாயுடு, ராஜ்நாத் சிங் ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்தனர். அப்போதும் பொது வேட்பாளரை நிறுத்துவது பற்றிதான் பேசப்பட்டதாகத் தெரிகிறது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close