Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாதொருபாகனுக்கான விருது திரும்பப் பெறப்பட்டதா? - மத்திய அரசு விளக்கம்

`மாதொருபாகன்' - பிரபல எழுத்தாளர் பெருமாள்முருகன் எழுதிய இந்தத் தமிழ் நாவல், பெரும் சர்ச்சையில் சிக்கியது. இதனால் பெருமாள்முருகன் தன் ஊரைவிட்டே வெளியேறவேண்டிய சூழல் ஏற்பட்டது. தற்போது மீண்டும் `மாதொருபாகன்' நாவலின் எதிர்ப்பாளர்களால் செய்திகளில் அடிபடத் தொடங்கியுள்ளது. `மாதொருபாகன்' நாவலின் ஆங்கிலப் பதிப்பான `One part Woman'-க்கு சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு `மாதொருபாகன்' எதிர்ப்புக் குழுவின் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த நாவலுக்குத் தடைவிதிக்கவேண்டித் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டது. தற்போது `ஒன் பார்ட் வுமன்' நாவலுக்கு வழங்கப்பட்ட விருது திரும்பப் பெறப்பட்டதாக நாவலின் எதிர்ப்பாளர்கள் முகநூலில் செய்தியைப் பகிர்ந்துவருகிறார்கள். 

மாதொரு பாகன் - விருது

இந்நிலையில், நேற்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தன் முகநூலில் ஒரு தகவலைப் பகிர்ந்திருந்தார். அதில் ``மாதொருபாகன்' ஆங்கிலப் பதிப்பு (One Part Woman) புத்தகத்துக்கு சாகித்திய அகாடமி விருதை ரத்துசெய்ய, கடந்த நான்கு நாள்களாக டெல்லியில் முகாமிட்டு கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மாவிடம் பேசி வெற்றி வாகை சூடி தந்த கங்கப்பா (Gangappa Doddappaiya - திருச்செங்கோடு பகுதியில் துணை ஆட்சியராக (1970-1980-களில்) பணியாற்றியவர், வேலூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு ஆட்சியராக இருந்தவர், எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது தலைமைச் செயலகத்தில் சிறப்பாகப் பணியாற்றியவர், தமிழகத்தில் நக்ஸல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்) அவர்களுக்கும், இதை டெல்லி வரை முன்னெடுத்துச் சென்ற கொங்கு மண்ணின் மைந்தர் Manickam Gounder அய்யா (மாணிக்கம் அத்தப்ப கவுண்டர் - மனு நீதிமன்றம்) அவர்களுக்கும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும், வீரம், மானம், ஒழுக்கம் நிறைந்த தமிழ்ப் பெண்களின் சார்பாகவும், குறிப்பாக திருச்செங்கோடு பெண்களின் சார்பாக ஆத்மார்த்த நன்றியைத் தெரிவித்துகொள்கிறேன்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தத் தகவலில் இறுதியாக `ஒன் பார்ட் வுமன்' நாவலுக்குக் கிடைக்கவிருந்த விருதை வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்திவிட்டதாகவும், அதற்கு உதவியவர்களுக்கும் நன்றியும் தெரிவித்திருந்தார்.

நாம் உடனே இந்த விவகாரம் தொடர்பாக மத்திய கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மாவின் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு கேட்டபோது `அப்படி எந்த நாவலுக்கும் தடை விதிக்கப்படவில்லை' எனத் தெரிவித்தனர். இன்று காலை இது தொடர்பாக ஒரு தமிழ் நாளிதழில் வெளியான செய்தியில் விருது கொடுக்க வேண்டாம் என்று மனு மட்டுமே கொடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அர்ஜுன் சம்பதிடம் இது பற்றி விளக்கம் பெறுவதற்குப் பலமுறை முயற்சி செய்தும் அவரின் எண் தொடர்பு எல்லைக்கு வெளியேதான் இருந்தது. 

மாதொருபாகன்

எழுத்தாளர் பெருமாள்முருகனைத் தொடர்புகொண்டு கேட்டபோது ``என் நாவலான 'மாதொருபாகன்' ஆங்கிலத்தில் அநிருத்தன் வாசுதேவன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டது. அதன் ஆங்கில மொழிபெயர்ப்புப் பிரதிக்குத்தான் சாகித்திய அகாடமி விருது கிடைத்துள்ளது. நீங்கள் குறிப்பிடும் செய்தி பற்றி நானும் நாளிதழில்தான் படித்தேன். சாகித்திய அகாடமி சார்பில் அறிவிக்கப்பட்ட விருதைத் திரும்பப்பெறுவார்களா என்பது எனக்குத் தெரியவில்லை" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close