Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போலீஸ் வாகனம் எரிப்பு; டார்ஜிலிங்கில் தொடரும் கலவரம்- மம்தா அவசர ஆலோசனை

டார்ஜிலிங்கில் தனி மாநிலம் கேட்டு போராடி வரும் போராட்டக்காரர்களை அடக்க ரப்பர் குண்டுகளைப் பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தி வருகின்றனர்.

darjeeling

மேற்கு வங்கம் டார்ஜிலிங்கில் உள்ள கூர்க்கா இன மக்கள் தனி மாநில கோரிக்கையை நீண்ட காலமாகவே வைத்து வருகின்றனர். அண்மையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாநிலம் முழுவதும் வங்க மொழி கட்டாயம் என்ற அறிவிப்பை வெளியிட்டது முதல், கூர்க்கா இன மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. காவல்துறை வாகனங்களுக்கு தீவைப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்களைக் கட்டுப்படுத்த அங்கு ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், கூர்க்காலாந்தை தனி மாநிலமாக அறிவிக்கக்கோரி போராடுபவர்களை விரட்ட, ரப்பர் குண்டுகளைப் பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே முதலமைச்சர் மம்தா பானர்ஜி முக்கிய அதிகாரிகளுடன் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மேலும், இன்று நடந்த கலவரத்தில் காவல்துறை வாகனம் ஒன்று தீவைக்கப்பட்டு, காவலரும் தாக்கப்பட்டார். இதையடுத்து டார்ஜிலிங் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close