Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சபர்மதி ஆஸ்ரமத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்!

மகாத்மா காந்தி வாழ்ந்த சபர்மதி ஆஸ்ரமம் இன்று தனது நூற்றாண்டு நிறைவு விழாவை சிறப்பாகக் கொண்டாடி வருகிறது.

மஹாத்மா காந்தி

இந்திய சுதந்திரப் போராட்ட காலங்களில் மகாத்மா காந்தி வாழ்ந்து வந்த சபர்மதி ஆஸ்ரமத்தின் 100-வது ஆண்டு நிறைவு விழா, கோபாலகிருஷ்ணன் காந்தி தலைமையில் நடைபெற்று வருகிறது. 1917 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17 ஆம் தேதி தொடக்க விழா கண்ட சபர்மதி ஆஸ்ரமம் இன்றோடு தனது நூறாண்டு கால பயணத்தை நிறைவு செய்கிறது.

அகமதாபாத்தில் சபர்மதி நதிக்கரையோரம் மகாத்மா காந்தியால் உருவாக்கப்பட்ட ஆஸ்ரமத்தில் தான் மஹாத்மா தன் வாழ்நாளில் முக்கியக் காலகட்டத்தில் வாழ்ந்தார். 1917 முதல் 1930 வரை காந்திஜி தன் மனைவி கஸ்தூரிபாய் காந்தியுடன் சபர்மதி ஆஸ்ரமத்தில் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இன்று நூற்றாண்டு விழாவை மகாத்மா காந்தியின் பேரனும், மேற்குவங்க ஆளுநருமான கோபாலகிருஷ்ணன் காந்தி தலைமையேற்று சிறப்பித்து வருகிறார்.

ஆஸ்ரம நிர்வாகிகளில் மேற்பார்வையில் இன்று பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதன்படி மகாத்மாவின் வாழ்க்கை நிகழ்வுகளை எடுத்துக்கூறும் வகையில் ‘My Life is My Message’ மற்றும் 'Charkha’ என்ற இரண்டு கேலரிகளை கோபாலகிருஷ்ணன் காந்தி தொடங்கி வைத்தார். மேலும், ’காந்திக்காக கடிதங்கள்’ மற்றும் ‘சத்யாகிரகத்தின் முன்னோடிகள்’ என்ற இரண்டு புத்தகங்களும் இன்று ஆஸ்ரம விழாவில் வெளியிடப்பட்டது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close