Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'எமர்ஜென்சி தவறென்று ஒப்புக் கொண்டவர்தான் இந்திரா காந்தி!' - ப.சிதம்பரம் பரபரப்பு பேச்சு

'இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியே, எமர்ஜென்சியை நடைமுறைப்படுத்தியது தவறென்று ஒப்புக் கொண்டவர்தான்.' என்று பேசியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.

ப.சிதம்பரம்

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டதையொட்டி, காங்கிரஸ் கட்சி அவரின் பெருமைகளை எடுத்துச் சொல்லும் விதமாக நாடு முழுவதும் பல கருத்தரங்குகள் மற்றும் கூட்டங்களை நடத்தி வருகின்றது. இதைப் போன்ற ஒரு கருத்தரங்கு ஹைதராபாத்தில் நடந்தது. அதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இந்திரா காந்தியைப் பற்றி பேசினார். அவர், 'இந்திரா காந்தி எந்த ஒரு மதத்தையோ, பகுதியையோ அல்லது சாதியையோ சார்ந்தவர் அல்ல. அதனால்தான் இன்று வரை அவர் அனைத்துத் தரப்பு மக்களாலும் விரும்பப்படுகிறார். இந்த கருத்தை ஒருவர் ஆமோதிக்கலாம், மறுக்கலாம் அல்லது விவாதத்துக்கு உள்ளாக்கலாம். ஆனால், ஒருவரும் இந்திரா காந்தியின் நாட்டுப் பற்றையோ, நாட்டு மக்கள் மீதிருந்த அன்பையோ சந்தேகப்பட முடியாது.' என்றார்.

இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது, 1975-ம் ஆண்டு அவசர நிலையை நாடு முழுவதும் பிரகடனப்படுத்தினார். இதனால் மக்களின் அடிப்படை சுதந்திரம், கருத்து சுதந்திரம் என பல முடக்கப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டது, ஊடகங்கள் ஒடுக்கப்பட்டது என்று அந்நேரத்தில் இந்திரா காந்தியின் நடவடிக்கைகள் மீது இன்று வரை பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதையொட்டி ப.சிதம்பரம், 'அவசர நிலையை பிரகடனப்படுத்தியது தவறென்று ஒப்புக் கொண்டவர்தான் இந்திரா காந்தி. அதுதான் அவரின் சிறந்த பண்பு. எமர்ஜென்சி பிரகடனப்படுத்திய போது, அந்த காலக்கட்டத்தை மனதில் வைத்து அதைப் பற்றி பேச வேண்டும்' என்று கூறியுள்ளார். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close