Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'உங்களுக்கு எல்லாவற்றிலும் சந்தேகம்தானா?'- மம்தாவை கிண்டல் செய்யும் அமித் ஷா

பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் அமித் ஷா, 'மம்தா பேனர்ஜி பார்க்கும் எல்லாவற்றிலும் சந்தேகம் கொள்கிறார்' என்று சர்ச்சை கருத்தைக் கூறியுள்ளார். 

அமித் ஷா

மேற்கு வங்கத்தில், 'கூர்காலாந்து' என்ற தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல ஆண்டுகளாக தொடரும் போராட்டம் என்றாலும், இப்போது போராட்டத்தின் வீரியம் அதிகரித்துள்ளது. இதையடுத்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, 'டார்ஜிலிங்கில் நடக்கும் கூர்காலாந்து போராட்டத்துக்குக் காரணம், வட கிழக்கு கிளர்ச்சி குழுக்கள் மற்றும் சில வெளிநாடுகளும்தான் என்று சந்தேகம் உள்ளது' என்று போராடத்தைப் பற்றி கருத்து கூறியுள்ளார். முன்னர் மம்தா, பல விஷயங்களில் இதைப் போன்ற சந்தேகிக்கும் தொணியில் நிறைய கருத்துகளை கூறியிருந்தார். 

இதையடுத்துதான் அமித் ஷா, 'மம்தாவுக்கு எதை எடுத்தாலும் சந்தேகம்தான். அவர் இதற்கு முன்பு இந்திய ராணுவத்துக்கு எதிராகக் கூட சந்தேகப்படும் வகையில் கருத்து கூறியுள்ளார்' என்று பேசினார்.  மேலும் அவர், 'பா.ஜ.கவுக்கு சிறு மாநிலங்கள் உருவாக்குவதில் ஈடுபாடு அதிகமாகவே இருக்கின்றனது. அது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும். அது பற்றி இறுதி முடிவு எடுக்கப்பட்ட பின், விரிவாக பேசலாம்' என்றுள்ளார். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close