Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குடியரசுத்தலைவர் வேட்பாளர் யார்? - அமித் ஷா பதில்

அமித் ஷா

ஜூலை 17 ஆம் தேதி நடைபெறவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து முடிவெடுக்கும் முன்னர், அனைத்துக்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே குடியரசுத்தலைவரைத் தேர்ந்தெடுக்க மத்திய அரசு விரும்புகிறது என்றும், அதனடிப்படையில்தான் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களை மத்திய அமைச்சர்கள் சந்தித்துப் பேசியிருப்பதாகவும் ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அமித் ஷா தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளுடன் அடுத்தசுற்று பேச்சுக்கு முன், பி.ஜே.பி சார்பில் யாரை நிறுத்துவது என்பது குறித்து சிலரது பெயர்கள் இறுதி செய்யப்படும் என்றும், அந்த பெயர்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் ஆலோசிக்கப்படும் என்றார் அவர்.

எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை, எந்தவொரு நபரையும் குடியரசுத்தலைவர் வேட்பாளராகத் தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், ஊடகங்கள் அவர்களாகவே சிலரின் பெயர்களை வெளியிட்டு வருகின்றன என்றார்.

ஜம்மு-காஷ்மீரில் ஆறு போலீஸார் தீவிரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டது பற்றி கேட்டபோது, காஷ்மீரில் நிலவும் இதுபோன்ற தாக்குதல்கள் பல காலமாக நடைபெற்று வருகிறது என்றும், பாதுகாப்புப்படையினர் தொடர்ந்து பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அமித் ஷா பதிலளித்தார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close