Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'மேற்கு வங்கத்தை பிரிக்க அனுமதிக்கமாட்டேன்! - மம்தா பானர்ஜி கறார்

மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் பகுதியில் 'கூர்காலாந்து' என்ற தனி மாநிலம் அமைத்துத் தரக் கோரி போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்தப் போராட்டம் தற்போது உச்சக்கட்டத்தை அடைந்திருப்பதையடுத்து, மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, 'மாநிலத்தை பிரிக்க நான் எப்போதும் அனுமதிக்க மாட்டேன்' என்று கூறியுள்ளார். 

மேற்கு வங்கம் டார்ஜிலிங்கில் உள்ள கூர்க்கா இன மக்கள் தனி மாநில கோரிக்கையை நீண்ட காலமாகவே வைத்து வருகின்றனர். அண்மையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாநிலம் முழுவதும் வங்க மொழி கட்டாயம் என்ற அறிவிப்பை வெளியிட்டது முதல், கூர்க்கா இன மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

இதையொட்டி அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, 'கூர்காலாந்துக்காக நடக்கும் போராட்டம் தீவிரவாதிகளால் ஊக்குவிக்கப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தரப்பினர் பத்திரிகையாளர்களைக் கடத்தி, பிணைக் கைதிகளாக வைத்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கல் எறிந்து அவர்கள் எதிர்ப்பைக் காட்டி இருந்தார்கள் எனில், இதை வேறு மாதிரி அணுகி இருப்பேன். ஆனால், அவர்களிடம் பெரும் எண்ணிக்கையில் ஆயுதங்கள் இருக்கின்றன. அவர்கள் கோரிக்கைகள் பற்றி என்னிடத்தில் பொறுமையாக எடுத்துக் கூறி இருந்தால், அதைப் பற்றி கட்டாயம் விவாதித்து இருப்பேன். ஆனால் என்னை ஆயுதத்தை வைத்து மிரட்டினீர்கள் என்றால், அந்த ஆயுதத்தை எப்படி பிடுங்குவது என்று எனக்குத் தெரியும். என் உயிரே போனாலும், வங்கத்தை பிரிக்க நான் அனுமதிக்க மாட்டேன்.' என்று தெரிவித்துள்ளார். 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close