Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னையைச் சேர்ந்த தம்பதியர் மீது உத்தரப் பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு!

சென்னையைச் சேர்ந்த தம்பதியர் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர் முசாபர்நகர் நெடுஞ்சாலையில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். 

தம்பதியர் மீது துப்பாக்கிச்சூடு

சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த ஆதித்யகுமார்- விஜயலட்சுமி தம்பதி ஹரித்வாரிலிருந்து இருசக்கர வாகனத்தில் உத்தரகண்ட் செல்லும் வழியில் தாக்கப்பட்டுள்ளனர். முசாபர் நகரை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, நேற்று மாலை 4 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவர்களை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இவர்களுடன் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த நண்பர் உடனடியாக தம்பதியை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். 

கழுத்தில் குண்டடிப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் கணவரும், காயங்களுடன் மனைவியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரித்து வரும் முசாபர் நகர் போலீஸார் கூறுகையில், ‘இத்தாக்குதல் தவறுதலாக ஆள்மாறி நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். மேலும்,  இது நெடுஞ்சாலை கொள்ளையாகக் கூட இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்’ என்றனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close