Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’பெற்றோர்களுக்காக காதலைத் தியாகம் செய்யும் பெண்கள்’: உச்சநீதிமன்றம்!

பெற்றோர்களின் விருப்பத்துக்காகத் தங்கள் காதலை தியாகம் செய்யும் பெண்கள் அதிகம், இது இந்தியாவில் பொதுவான விஷயம் கூட’ என உச்சநீதிமன்றம்  ஒரு காதல் தற்கொலை வழக்கில் கூறப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம்

1995 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்துக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி காதலர்கள் திருமணம் செய்துள்ளனர். ஆனால், பெற்றோர்களின் தொடர் துன்புறுத்தலால் மனமுடைந்த காதலர்கள் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளனர். இதில் காதலன் பிழைத்துக்கொள்ள, காதலி மரணமடைந்துவிட்டார்.

இந்த வழக்கில் அந்தப் பெண்ணை, காதலன் கொலை செய்ததாகக் கூறப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் தற்கொலைக்கு முயற்சித்ததாகவும், தற்கொலைக்கு தூண்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றுள்ளார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ’தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என தன் காதலியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார் காதலன். இருவரும் விஷம் எடுத்துக்கொண்டுள்ளனர். இதில் காதலி விஷம் அதிகமாக எடுத்துக்கொண்டதால் உயிருக்கு தவித்து வந்துள்ளார். உதவி தேடிச் சென்ற காதலன் திரும்பி வரும் முன்னர், அப்பெண் வலி பொறுக்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்’. இதனால் அந்நபருக்கு இந்தியச் சட்டப்படி ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

’இச்சம்பவம் வேதனை அளித்தாலும், தண்டனை சட்டபூர்வமாகவே வழங்கப்படும். இந்தியாவில் பெற்றோர்களுக்காகப் பெண்கள் தங்கள் காதலை தங்கள் விருப்பத்தையும் மீறி தியாகம் செய்கின்றனர்’ என உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close