Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சத்தீஸ்கரில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் காவல்துறையினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் மூன்று நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

நக்சல்

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, பாதுகாப்புப் படையினர் தொடர் தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர். எனினும் பல்வேறு இடங்களில் நக்சல்கள் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 மாதங்களில் 40க்கும் அதிகமான பாதுகாப்புப் படையினர் நக்சல்களால் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இன்று சத்தீஸ்கர் வனப்பகுதியில் காவல்துறையினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் 3 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதில் சலிமா என்ற பெண் நக்சலும் கொல்லப்பட்டுள்ளார். மேலும், துப்பாக்கி உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து சத்தீஸ்கர் வனப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close