Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பா.ஜ.க எம்பி-க்களுக்கு தலைமையின் புதிய உத்தரவு!

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கலந்து ஆலோசிக்க பா.ஜ.க எம்பி-க்கள் அனைவரையும் டெல்லி வர கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.

மோடி- அமித்ஷா

ஜூலை மாதத்துடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் 14 ஆம் தேதி முதல் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே பா.ஜ.க சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து வருகிற 23 ஆம் தேதிக்குள் அறிவிக்கவுள்ளதாக வெங்கைய நாயுடு கூறியுள்ளார். மேலும், பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு வேட்பாளரை நிறுத்தவிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், பா.ஜ.க கூட்டணிகள் சார்பில் நிறுத்தப்படவிருக்கும் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து வருகிற ஜூன் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் கட்சி ஆலோசிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க பா.ஜ.க எம்பி-க்கள் அனைவரும் டெல்லி வரவேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close