Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜூன் 20 முதல் போராட்டம்... ராஜஸ்தான் விவசாயிகள் திட்டவட்டம்!

ராஜஸ்தான் அரசாங்கத்தைக் கண்டித்து மாநிலம் முழுவதும் விவசாயிகள் 20 ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தவுள்ளதாகக் கூறியுள்ளனர்.

ராஜஸ்தான்

கடந்த ஏப்ரல் மாதம் அய்யாகண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் டெல்லியில் 40க்கும் மேற்பட்ட நாள்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் என பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் மத்தியப் பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 6 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனிடையே ராஜஸ்தான் மாநில விவசாயிகள் இம்மாதம் 20 ஆம் தேதி முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். இது குறித்து பேசிய பாரத கிசான் சங்கத் தலைவர் கைலாஷ் கண்டோலியா, 'வசுந்திரா ராஜேவின் அரசாங்கம் விவசாயிகள் மீது அக்கறை செலுத்துவதில்லை. எங்கள் பிரச்னைக்கு செவி சாய்ப்பதுமில்லை. இதனால், இந்த அரசாங்கத்தைக் கண்டித்து மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகள் 20 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.விவசாய சந்தைகளை மூடி, தெருவில் அமர்ந்து போராடப் போகிறோம்' எனக் கூறியுள்ளார். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close