Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சாம்பியன்ஸ் டிராபி தோல்வி: தோனி வீட்டின் முன் பாதுகாப்புப் படை குவிப்பு!

dhoni

சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிப்போட்டியில், பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், தோனியின் இல்லத்தின் முன்பு பாதுகாப்புப் படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இங்கிலாந்து, ஓவல் மைதானத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டியில் இந்திய அணியை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது பாகிஸ்தான். இதனால், இந்திய ரசிகர்கள் ஆங்காங்கே வீரர்களின் உருவப் படங்களை எரித்தும், கோஷங்களை எழுப்பியும் தங்களின் எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியிலுள்ள முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் வீட்டுக்குப் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவரது வீட்டின் முன்பு பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். நேற்று நடந்த இறுதிப்போட்டியில் 16 பந்துகளில் வெறும் நான்கு ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார் தோனி. 2007 உலகக்கோப்பைத் தோல்வியின்போது அப்போது அணியில் இடம்பெற்றிருந்த தோனியின் வீடு ரசிகர்களால் தாக்குதலுக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close