Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு: இன்று கூடுகிறது பாஜக ஆட்சி மன்றக் குழு!

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கலந்து ஆலோசிக்க பா.ஜ.க எம்பி-க்கள், முக்கிய நிர்வாகிகள் உள்பட அனைவரையும் டெல்லி வர கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.

பாஜக குழு

ஜூலை மாதத்துடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் 14 ஆம் தேதி முதல் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே பா.ஜ.க சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து வருகிற 23 ஆம் தேதிக்குள் அறிவிக்கவுள்ளதாக வெங்கைய நாயுடு கூறியுள்ளார். மேலும், பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு வேட்பாளரை நிறுத்தவிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாஜக ஆட்சி மன்றக் குழு இன்று கூடுகிறது. கட்சியின் மூத்தத் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர். சோனியா காந்தி, சீதாராம் யெச்சூரி ஆகியோரைச் சந்தித்து ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளரை நிறுத்தும் முடிவுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால், தேசிய ஜனதா கூட்டணி சார்பில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என பாஜக-வின் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து இன்று கூடும் ஆட்சி மன்ற நிர்வாகிகள் குழு தே.ஜ.கூ. சார்பாக முன்னிறுத்தும் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து முடிவு செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு முடிவு செய்யப்பட்டால், இன்றே தே.ஜ.கூட்டணியின் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close