Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’கொள்கைகள் இல்லாமல் வெற்று அரசியல் செய்யும் கட்சி’: அமித்ஷா விளாசல்!

சுதந்திரத்துக்குப் பின்னர் கொள்கைகள் ஏதுமின்றி அரசியல் செய்து வருகின்றனர் காங்கிரஸ் கட்சியினர் என மும்பையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் அமித் ஷா தெரிவித்தார்.

அமித் ஷா

நாடாளுமன்றத் தேர்தலுக்காகப் பல பொதுக்கூட்டங்கள், நிகழ்வுகள் என மக்களைத் தொடர்ந்து சந்தித்து வருகிறார் பாஜக-வின் தேசியத் தலைவர் அமித் ஷா. அவ்வாறு நேற்று நடந்த ஒரு கூட்டத்தில் அமித் ஷா பேசுகையில், ‘சுதந்திரத்துக்காக இந்திய மக்கள் அனைவரும் ஒன்றிணைந்த கட்சியே காங்கிரஸ். பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரத்துக்காக மக்கள் பயன்படுத்திய ஒரு ‘சிறப்பு பயன்பாட்டு வாகனம்'தான் காங்கிரஸ். அதனின் பயன்பாடு சுதந்திரத்துடன் நிறைவு பெற்றுவிட்டது. தற்போது எந்தக் கொள்கைகளும் இன்றி வெறும் அரசியல் செய்து கொண்டிருக்கிறது காங்கிரஸ்’ எனக் குற்றம்சாட்டினார்.

மேலும் அவர் கூறுகையில், ’காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில், வசதியானவர்கள் மட்டுமே பதவிகளுக்கு எல்லாம் வரமுடியும். அங்கு குடும்ப ஆட்சியே நடக்கிறது. ஆனால் பா.ஜ.க.-வில் ஒரு டீக்கடைக்காரர் பிரதமர் ஆக முடிகிறது. எந்த நிலைத் தொண்டனும் உயர் பதவிகளுக்கு வர முடியும்’ எனக் குறிப்பிட்டார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close