Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’அமைதியை நிலைநாட்ட ஒன்றிணைவோம்’: டார்ஜிலிங் மக்களுக்கு மம்தா வேண்டுகோள்!

’அனைவரும் ஒன்றிணைந்து அமைதியை நிலைநாட்டுவோம்’ என டார்ஜிலிங் பகுதி மக்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்புவிடுத்துள்ளார்.

மம்தா பானர்ஜி

டார்ஜிலிங்கில் ‘கூர்காலாந்து’ எனத் தனி மாநிலம் வேண்டி அந்தப் பகுதி மக்கள் தொடர்ச்சியாக எட்டாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே நடக்கும் மோதலால் பதற்றம் அதிகரித்து வருகிறது. இதனால் டார்ஜிலிங் வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகினர். இந்தப் பரபரப்பான சூழலில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் துணை ராணுவப் படையினர் அந்தப் பகுதியில் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

பதற்றச் சூழல் அதிகரித்து வரும் நிலையில், வன்முறைப் போராட்டங்களை ஒருபோதும் அரசு ஆதரிக்காது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, ‘அனைவரும் ஒன்றிணைந்து அமைதியை நிலைநாட்டுவோம், மூன்று நாள்கள் நெதர்லாந்தில் நடக்கவுள்ள ஐநா சபைக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளேன். இதனால் பொறுப்புகள் அனைவருக்கும் பிரித்தளிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் பயப்பட வேண்டாம்’ எனக் கூறியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் வங்காள மொழி கட்டாயம் என அறிவிக்கப்பட்ட பின்னரே போராட்டங்களும், கலவரங்களும், வன்முறைச் சம்பவங்களும் டார்ஜிலிங் பகுதியில் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close