Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டென்ஷன் குறைக்க இனி வரப்போகுதாம்  சிரிப்புப் பல்கலைக்கழகம்!

பெங்களூரு சிக்பள்ளாபுரா மாவட்டத்தில், 15 ஏக்கர் நிலப்பரப்பில் சிரிப்புப் பல்கலைக்கழகம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது

சிரிப்பு

மனசுக்குள் புயலே அடித்தாலும் உற்சாகமாக இயங்கவைப்பது சிரிப்புதான். அகம் மகிழ்ந்து சிரிப்பதால், உடலை நோய் அண்டாமல் தடுக்கலாம். ஆம், சிரிப்பதற்காகவே ஒரு பல்கலைக்கழகம் அமையவிருக்கிறது. அதுவும் கர்நாடகாவில். உலகில் இதுதான் முதல் சிரிப்புப் பல்கலைக்கழகமாம். பெங்களூரு சிக்பள்ளாபுரா மாவட்டத்தில், 15 ஏக்கர் நிலப்பரப்பில் சிரிப்புப் பல்கலைக்கழகம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் பல்கலையை இரண்டு ஆண்டுகளில் செயல்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கான வேலைகள் நடக்கின்றன. உலகளவில் இயங்கி வரும் சிரிப்பு மன்றங்களும் இந்தப் பல்கலை உருவாகக் காரணம். 65 நாடுகளைச் சேர்ந்த சிரிப்பு மன்றங்கள் பெங்களூரில் கூடி, இந்த நல்ல முடிவை எடுத்துள்ளன. இங்கு, மண் குடிசைகள் வகுப்பறைகளாக அமைய உள்ளன. பல்கலையைச் சுற்றி வரும்போதே தானாகச் சிரிப்பு வர வேண்டுமாம். மத்திய, மாநில அரசு மற்றும் தனியாரின் ஒத்துழைப்போடு இதற்கான முயற்சிகள் தொடங்கியுள்ளன . பெருநகர வேகம், மக்களை இயந்திரங்களாக மாற்றிக்கொண்டிருக்க,கிராமம்... நகரம் என்று எங்கும் பரவிக்கிடக்கிறது டென்சன் வியாதி. இப்படியொரு பல்கலைக்கழகம், காலத்தின் கட்டாயம். புன்னகையுடன் வரவேற்போம். 

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close