Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குடியரசுத் தலைவர் தேர்தல் : பா.ஜ.க வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்

குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க சார்பில் ராம்நாத் கோவிந்த் போட்டியிடுகிறார்.

ஜூலை மாதத்துடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் 14 ஆம் தேதி முதல் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே பா.ஜ.க சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து வருகிற 23 ஆம் தேதிக்குள் அறிவிக்கவுள்ளதாக வெங்கைய நாயுடு கூறியுள்ளார். மேலும், பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு வேட்பாளரை நிறுத்தவிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், பா.ஜ.க ஆட்சி மன்றக் குழு இன்று கூடியது. கட்சியின் மூத்தத் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பா.ஜ.க குடியரசுத் தலைவர் குறித்து தேர்வு செய்யப்பட்டது. அதன்படி, ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளராக போட்டியிடுவார் என்று அமித் ஷா அறிவித்துள்ளார்.


71 வயதாகும் ராம்நாத் கோவிந்த் தற்போது பீகார் ஆளுநராக பதவி வகித்து வருகிறார். இவர் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். வருகின்ற 23 ஆம் தேதி ராம்நாத் வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார்.  ஆனால், துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. விரைவில்  துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று அமித் ஷா கூறியுள்ளார். ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு அளிப்பதாக தெலுங்கு தேசம் மற்றும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில்  ராம்நாத் கோவிந்தை ஆதரிக்கக் கோரி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோரிடம் தொலைபேசி அழைப்பு மூலம் மோடி கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, மோடி மற்றும்  ராம்நாத் நாளை சந்திக்க உள்ளனர்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close