Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

10.25 லட்சம் விவசாயிகளின் பயிர்க் கடன்களைத் தள்ளுபடிசெய்த பஞ்சாப் முதல்வர்!

amarinder singh

பஞ்சாப் மாநிலத்தில் சுமார் 10.25 லட்சம் விவசாயிகளின் பயிர்க் கடன்களைத் தள்ளுபடிசெய்து அறிவித்துள்ளது, பஞ்சாப் அரசு. சிறு,குறு விவசாயிகளின் கடன்கள் மொத்தமும் தள்ளுபடிசெய்யப்படும் என பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். மேலும், 1.5 லட்சம் விவசாயிகளுக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு, நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பஞ்சாப் மாநிலம் முழுவதும் இந்த வருடம் கடும் வறட்சியைச் சந்தித்தது. இதனால், அந்த மாநில விவசாயம் முற்றிலும் பொய்த்துப்போனது. விவசாயிகள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். விவசாயம் செய்வதற்காக வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தமுடியாத சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில், முதல்வரின் கடன் தள்ளுபடி அறிவிப்பு, பஞ்சாப் மாநில சிறு,குறு விவசாயிகளுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. மேலும், தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்துக்கான நிவாரணத் தொகை 3 லட்ச ரூபாயிலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close