Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜனாதிபதி வேட்பாளர் ராம் நாத்தை எதிர்க்கும் சிவசேனா?

ஆளும் தே.ஜ.கூ சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளருக்கு முக்கியக் கட்சிகளுள் ஒன்றான சிவசேனா எதிர்ப்புத் தெரிவிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தாக்கரே

ஜூலை மாதத்துடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து, குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் கடந்த 14 ஆம் தேதி முதல் தாக்கல்செய்யப்பட்டுவருகின்றன. இதனிடையே, தே.ஜ.கூ சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக, ராம் நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். 

இதையடுத்து, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைப் பெறும் வகையில், கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்துவருகிறார் ராம் நாத் கோவிந்த். இதுகுறித்து ராம் நாத் கோவிந்த் கூறுகையில், ‘நாட்டின் சிறிய குடிமகனான எனக்கு மிகப்பெரும் பொறுப்பு கிடைத்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கவுள்ள அனைவரையும் சந்தித்து ஆதரவு கோரவுள்ளேன். என்னை ஆதரிப்பர் என நம்புகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சிவசேனா தே.ஜ.கூ -யின் ஜனாதிபதி வேட்பாளரை எதிர்ப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில், ‘ஜனாதிபதி வேட்பாளரைத் தலித் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக நிறுத்தியிருந்தால், நிச்சயமாக அவரை சிவசேனா ஆதரிக்காது’ என மாநாடு ஒன்றில் தாக்கரே பேசினார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close