Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓடும் காரில் பலாத்காரம்செய்து சாலையில் வீசப்பட்ட பெண்! டெல்லியில் தொடரும் அவலம்

டெல்லியில் மர்மக் கும்பல் ஒன்று, பெண்ணை ஓடும் காரில் பாலியல் பலாத்காரம்செய்து, சாலையில் வீசிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

delhi women


ராஜஸ்தானைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண், சில வாரங்களுக்கு முன்னர்தான் டெல்லி சென்றுள்ளார். நேற்றிரவு மூன்று பேர் கொண்ட கும்பல் அந்தப் பெண்ணைக் கடத்திச்சென்று, காரில் வைத்தே பாலியல் பலாத்காரம்செய்து, சாலையில் தூக்கி வீசிச் சென்றுள்ளனர்.

படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்தப் பெண் கூறுகையில், நேற்றிரவு சுமார் எட்டு மணிக்கு குர்கான் பகுதியில் தன்னைக் கடத்திச் சென்றதாகவும், பின்னர் ஓடும் காரில் வைத்து பாலியல் பலாத்காரம்செய்து சாலையில் வீசிவிட்டதாகவும் கூறினார்.

சாலையில் நடந்துசென்ற ஒருவர், காவல்துறைக்குத் தகவல் தெரிவித்ததால், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவப் பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருப்பதாகப் போலீஸார் தெரிவித்தனர். தலைநகரில் அரங்கேறியுள்ள இந்தக் கோரச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close