Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜனாதிபதி காரை நிறுத்தி ஆம்புலன்சுக்கு வழிவிட்டார்! ஹீரோவான ட்ராஃபிக் போலீஸ் நிஜலிங்கப்பா

பரபரப்பான பெங்களூரு சாலையில், ஆம்புலன்ஸுக்கு வழிவிடுவதற்காக குடியரசுத் தலைவரின் காரையே தடுத்து நிறுத்திய போக்குவரத்துக் காவலருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

Nijalingappa
 

கடந்த சனிக்கிழமை, பெங்களூருவில் மெட்ரோ க்ரீன் லைன் திறப்பு விழா நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்ட குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை பலத்த பாதுகாப்புடன்  ட்ரினிட்டி பகுதி வழியாக அழைத்துச் சென்றது பெங்களூரு போலீஸ். 

அப்போது, ட்ரினிட்டி பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் எம்.எல். நிஜலிங்கப்பா, அந்த வழியை ஆம்புலன்ஸ் ஒன்று கடக்க முடியாமல் நின்றுகொண்டிருப்பதைக் கவனித்துள்ளார். உடனே சற்றும் யோசிக்காமல், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் காரை தடுத்துநிறுத்தி, முதலில் ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டுள்ளார். இந்தச் சம்பவத்தைக் கவனித்த மற்ற அதிகாரிகளும் பொதுமக்களும் அவரைப் பாராட்டியுள்ளனர். இந்தச் சம்பவம், சமூக வலைதளம் வாயிலாகப் பரவி, ஒரே நாளில் நிஜலிங்கப்பாவை ட்ரெண்டாக்கிவிட்டது. அனைவரின் மனதிலும் நிஜலிங்கப்பா நீங்கா இடம் பிடித்துவிட்டார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close