Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தொடரும் பெண்கள் பலாத்காரம்... தூங்கும் காவல்துறை!

உத்தரப்பிரதேசத்தில் 30 வயது பெண் காரில் வைத்து பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், எந்தக் கவலையும் இல்லாமல் காவல்துறை வாகனத்திலேயே காவலர்கள்  ஓய்வெடுக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

நொய்டா

உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சியமைத்தது. இதையடுத்து அங்கு பசுவதைக்கு தடை, ஆன்டி-ரோமியோ படை என பல சர்ச்சைகள் வெடித்தன. இதனிடையே அண்மைக் காலமாக உத்தரப்பிரதேசத்தில் பெண்கள் பலாத்காரம் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனிடையே நேற்று இரவு டெல்லியில் இருந்து 30 வயது பெண் ஒருவர், காரில் கடத்தப்பட்டு 3 ஆண்களால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் நொய்டாவில் உள்ள சாலையில் வீசப்பட்டுள்ளார். இது குறித்து உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பலாத்காரம் நடந்த நொய்டாவில் காவல்துறை அதிகாரிகள் தூங்கிக் கொண்டிருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. காவல்துறை வாகனத்தில் அவர்கள் கவலையில்லாமல் ஓய்வெடுக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் காவல்துறையும், அரசாங்கமும் வெகு காலமாக தூங்கிக் கொண்டிருக்கிறது என நெட்டிசன்கள் பொங்கி வருகின்றனர். கடந்த மே மாதம், ஹரியானா மாநிலம் குருகரம்மில் பெண் ஒருவர் ஆட்டோவில் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் அவரது குழந்தையும் கொல்லப்பட்டது. இதையடுத்து குழந்தையுடன் அவர் சாலையில் வீசியெறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close