Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முன்னாள் நீதிபதி கர்ணன் கோவையில் கைது!

கோவையில் முன்னாள் நீதிபதி கர்ணன் கைது செய்யப்பட்டார்.

karnan

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகளால், ‘நீதிமன்ற அவமதிப்பு’ வழக்கில் தண்டனை பெற்று தலைமறைவாக இருந்தார் நீதிபதி கர்ணன். தமிழகத்தைச் சேர்ந்த இவர், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்னர்,  தன் சக நீதிபதிகள் மீது ஊழல் புகார் தெரிவித்திருந்தார். இதையொட்டி,உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. இறுதியாக நீதிபதி கர்ணன் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

உச்சநீதிமன்ற  நீதிபதிகளுக்கே தண்டனை விதித்த கர்ணன் மீது அடுக்கடுக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதையொட்டி, உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன், தன் பதவிக்காலத்திலேயே தலைமறைவானார். சுமார் ஒரு மாத காலத்துக்கும் மேலாக தலைமறைவாக வாழ்ந்து வந்தார் கர்ணன். இந்நிலையில், அவர் இன்று கோவையில் கைது செய்யப்பட்டார். 

கோவை கற்பகம் பல்கலைக்கழகம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த நீதிபதி கர்ணனை,  மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 3 தனிப்படை போலீசார் மூன்று நாட்கள் நோட்டமிட்டமிட்டிருக்கிறார்கள். நீதிபதி கர்ணனின் செல்போன் சிக்னல்களை கொண்டு  அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்ததாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. இதற்கு  கோவை போலீசாரும்  உடன் இருந்து உதவிசெய்திருக்கிறார்கள். கைது செய்ய சென்ற போலீஸாரிடம் நீதிபதி கர்ணன் வாக்குவாதம் செய்து தப்பிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட கர்ணன் இன்று இரவே மேற்கு வங்கம் அழைத்துச் செல்லப்படுவதாக  காவல்துறை தரப்பில் தெரிவிக்கிறார்கள். கைது செய்யப்பட்ட நீதிபதி கர்ணனை சென்னைக்கு அழைத்துச் செல்வதற்காக கோவை விமான நிலையத்துக்கு  போலீஸார் அழைத்து வந்தார்கள். 

இதையடுத்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நீதிபதி கர்ணன், 'உச்சநீதிமன்றம் நீதித்துறையில் லஞ்சம் இருக்கணும்னு சொல்கிறார்கள். நான் நீதித் துறையில் லஞ்சம் இருக்கக்கூடாதுனு சொல்கிறேன். அதனால்தான் என் மீது வழக்கு போட்டிருக்கிறார்கள். என்னை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன இருக்குது. என்ன வழக்கு என்று நாட்டு மக்களுக்கு சொல்லுங்க. நான் தேசிய நலனுக்காக போராடுகிறேன். நீதிபதிகள் தனிப்பட்ட லாபத்துக்காக போராடுகிறார்கள். காவல்துறை மீது எந்த குறைபாடும் இல்லை. அவர்கள் சட்டப்படி நடந்துகொண்டுள்ளார்கள் என்னுடைய போராட்டம் தொடரும்' எனக் கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close