Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'மாட்டிறைச்சித் தடையை ரத்துசெய்ய வேண்டும்' : ஜி.கே.வாசன்

ராமநாதபுரத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் இஃப்தார் நோன்பு விழா நடந்தது.  அந்த விழாவில் பங்கேற்ற த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

gk vasan
 

அப்போது அவர், ’தனி மனித சுதந்திரத்திலோ, தனிப்பட்ட உணவுப் பழக்கவழக்கங்களிலோ தலையீடு செய்ய யாருக்கும் உரிமை இல்லை. இதைப் புரிந்துகொள்ளாமல், பி.ஜே.பி அரசு மாட்டு இறைச்சிக்குத் தடை விதித்துள்ளது. அப்படியானால், மற்ற மாமிசங்களுக்கு ஏன் தடை கூடாது என்ற கேள்வி எழும். எனவே, மாட்டு இறைச்சித் தடையை ரத்துசெய்ய வேண்டும். ஜிஎஸ்டி மசோதாவை அமல்படுத்த அரசு அவசரம் காட்டவேண்டியதில்லை. இதனால் ஏற்படும் சாதக பாதகங்கள்குறித்து வியாபாரிகளுக்கு உரிய விழிப்புஉணர்வை ஏற்படுத்த வேண்டும்.

ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்காத அளவு ஜிஎஸ்டி இருக்க வேண்டும். அதே போல, காமராஜர் பெயரில் இயங்கும் எண்ணூர் துறைமுகம் ஆண்டுக்கு 450 கோடி வருவாய் ஈட்டிவருகிறது. இதைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். தமிழ்நாட்டின் தற்போதைய அசாதாரணச் சூழலை கருத்தில்கொண்டு, மத்திய அரசு உடனடியாக நிரந்தர கவர்னரை நியமிக்க வேண்டும். மீனவர் பிரச்னையைப் பொறுத்தமட்டில், தடைக் காலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்ற சில தினங்களிலேயே மீண்டும் நம் மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கு, மத்திய அரசு பதில் சொல்லியாக வேண்டும்.

மீனவர்களின் வாழ்க்கைக்கு, ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் வேற்றுமையில் ஒற்றுமை காணக்கூடிய அரசியலுக்கு அப்பாற்பட்ட நடுநிலையான ஒருவரைத் தேர்வுசெய்ய வேண்டும் என்பதே எங்களின் கருத்து. அது நிறைவேறும் என நம்புகிறோம். தமிழக அரசின் செயல்பாட்டில் திருப்தி இல்லை. அரசைச் சார்ந்த எம்எல்ஏ-க்களே அவர்களுக்குத் தலை வலியாக இருந்துவருகின்றனர். குதிரை பேரம் என்ற பேச்சு ஆட்சிக்கு அவமானம் ஆகும். இது, சந்தேகத்தை எழுப்புகிறது. இதனைப் போக்க, இதுகுறித்து உரிய விசாரணை நடத்த அரசு உத்தரவிட வேண்டும்.

இன்றைக்குத் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது. குறிப்பாக, செயின் பறிப்புச் சம்பவங்கள் நகரம், கிராமம் என வேறுபாடின்றி நடக்கிறது. இதனால், மக்கள் அச்சத்துடனேயே வாழ்கின்றனர். இதைத் தடுக்க, தனிப்படை அமைக்க வேண்டும். ரஜினி பல துறைகளைச் சார்ந்தவர்களிடமும் நல்ல நட்பைக் கொண்டிருப்பவர். அவர் அரசியலுக்கு வருவதுகுறித்து அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவராத நிலையில், அதைப் பற்றி கருத்து கூற முடியாது’ என்றார்.

ஜி.கே.வாசனுடன் முன்னாள் எம்எல்ஏ-க்கள் கோவை தங்கம், விடியல் சேகர், ராம்பிரபு, அசன் அலி, கம்பம் அப்பாஸ், மாவட்டத் தலைவர் ராமவன்னி, ரங்கநாதன், ராமநாதபுரம் நிர்வாகிகள் முனியசாமி, பஷீர், முகேஷ் உட்பட பலர் இருந்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close