Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐடி நிறுவனங்களில் அதிகளவில் அமெரிக்கர்களுக்கு வேலை - நிறுவனங்களின் தாராளத்திற்கு காரணம் என்ன?

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஹெச்-1 விசா கட்டுப்பாடு கொண்டு வந்தபோது பன்னாட்டு ஐடி நிறுவனங்கள் கவலையில் ஆழ்ந்தன. பல்வேறு ஐடி நிறுவனங்கள் வேலைக் குறைப்பு அறிவிப்பை வெளியிட்டு பணியாளர்களிடையே அதிர்ச்சியை உருவாக்கி வருகின்றன. ஐடி நிறுவனங்கள் புதியதாக ஆட்கள் தேர்வு செய்வதும் குறைத்துக் கொண்டிருப்பது வேலை வாய்ப்பு சந்தையில் தேக்கநிலையை உருவாகியிருக்கிறது. 

ஐடி நிறுவனங்கள்

இந்த நிலையில் அமெரிக்காவில் தங்களுடைய நிறுவன பணிகளை தக்க வைப்பதற்கு ஐடி நிறுவனங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இன்போசிஸ் நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10,000 அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றும், அமெரிக்காவில் நான்கு புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆய்வகங்கள் அமைப்பதற்குப் பெரிய அளவில் முதலீடு செய்யப்படும் என்று அறிவித்து இருக்கிறது. 

இதைப்போலவே, டிசிஎஸ் நிறுவனமும், 'கடந்த ஐந்தாண்டுகளில் 12,500-க்கு அதிகமான அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி இருக்கிறோம். கடந்த மூன்று ஆண்டுகளாக வேலை வாய்ப்பு, புதிய கண்டுபிடிப்புக்கான ஆய்வகங்கள் அமைப்பது, அறிவியல், தொழில்நுட்பம் துறைகளில் கல்வி கற்பித்தல் பிரிவில் பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொண்டதன் மூலம் மூன்று பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்து இருக்கிறோம்' என்று அறிவித்து இருக்கிறது. 

இந்த முடிவுகள் அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்பைச் சமாதானப்படுத்தும் நோக்கத்திற்காக மேற்கொள்ளப்படுகின்றன என்கிறார்கள் ஐடி துறையில் உள்ள நிபுணர்கள். டிசிஎஸ், இன்போசிஸ், காக்னிசன்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் அமெரிக்காவில் திட்டப்பணிகளைப் பெற்று அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்காமல் ஹெச்-1 பி விசா மூலம் வெளிநாட்டினருக்கே வேலை வாய்ப்பை வழங்குகின்றன என்று ஐடி நிறுவனங்களின் மீது குற்றச்சாட்டுகிறார்கள். 

இதனால்தான், அமெரிக்க அதிபர் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஹெச் 1 பி கட்டுப்பாடு கொண்டு வந்தபோது அமெரிக்காவில் பெரிய அளவில் எதிர்ப்புகள் வரவில்லை. அமெரிக்கர்கள் இந்த முடிவை வரவேற்கவே செய்கிறார்கள் என்கிறார்கள்.

தற்போது விசா கட்டுப்பாடுகளால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் செலவினங்கள் அதிகரித்திருப்பதோடு, திறமையான பணியாளர்களை அமெரிக்காவில் தேட வேண்டி கட்டாயத்தில் இருக்கிறார்கள். செலவு அதிகரித்திருப்பதால் இந்தியாவில் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்கிறார்கள். தற்போது இந்திய நிறுவனங்களுக்கு 60% தகவல் தொழில்நுட்ப திட்டப்பணிகள் அமெரிக்காவில் இருந்தே கிடைக்கின்றன. இதனால் இந்தியாவில் உள்ள ஐடி நிறுவனங்கள் அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப பணிகளையே பெரிதும் நம்பி இருக்க வேண்டிய நிலையில் இருக்கின்றன.

ஐடி நிறுவனங்கள்

அமெரிக்காவில் 2012-ம் ஆண்டில் இருந்து 2016-ம் ஆண்டு வரை 12,500 அதிகமாக வேலை வாய்ப்பு வழங்கிய நிறுவனங்கள் இரண்டு மட்டுமே. அதில் ஒன்று டிசிஎஸ் என்றும், இந்தக் காலகட்டத்தில் அமெரிக்க பணியாளர்களின் எண்ணிக்கை வளர்ச்சி 57% உயர்ந்திருக்கிறது என்றும் குறிப்பிட்டு இருக்கிறது டிசிஎஸ் நிறுவனம். 

‘அமெரிக்க வேலை வாய்ப்பு சந்தையில் டிஜிட்டல் டிரைனிங், அறிவியல், தொழில்நுட்ப கல்வி திட்டங்களிலும் டிசிஎஸ் நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது. இதன் வழியாக அமெரிக்காவின் புதுமையான கண்டுபிடிப்புக்கான பொருளாதாரத்தில் டிசிஎஸ் நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது' என்கிறார் அமெரிக்க, ஐரோப்பிய பகுதிக்கான டிசிஎஸ் நிறுவனத்தின் தலைவர் சூரிய காந்த். 

தற்போது அமெரிக்காவின் நடவடிக்கையைப் போலவே சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வர ஆரம்பித்திருக்கின்றன. இந்தக் கட்டுப்பாடுகளுக்கு தகுந்தாற்போல் நிறுவனங்களும் தங்களை வடிவமைத்துக்கொள்ள ஆரம்பித்து இருக்கின்றன. இதன் ஒரு பகுதியாக, வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்து உள்ளூர் பணியாளர்களுக்கு வேலை வழங்க முடிவெடுத்து இருக்கின்றன. 

ஐடி நிறுவனங்கள் விசா கட்டுப்பாடுகள் மோடி டிராம்ப் பேச்சுவார்த்தை

ஜூன் 26-ம் தேதி அமெரிக்காவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர்  டெனால்ட் டிரம்ப்-ஐ சந்தித்துப் பேச இருக்கிறார். மோடி டிராம்பிடம் ஹெச் 1 பி கட்டுப்பாடுகளைத் தளர்த்துமாறு வேண்டுகோள் விடுவிப்பார் என எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. இந்தப் பேச்சு வார்த்தையின் மூலம் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏதேனும் மாற்றங்கள் நடக்குமா என்று காத்திருக்கிறார்கள் ஐடி நிறுவன தலைவர்கள்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close