Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அத்துமீறி நுழைந்த சீனா... எல்லையில் பதற்றம்!

சிக்கிம் அருகே, இந்திய எல்லைப் பகுதியில் சீனா அத்துமீறி நுழைந்துள்ளது.

China Transgress


சிக்கிம் பகுதியில், கடந்த சில நாள்களாகவே சீனத் துருப்புகள் அத்துமீறி நுழைந்துவருகிறது. இந்த நிலையில், அங்கு தோகா லா என்ற பகுதியில் நுழைந்த சீனத் துருப்புகள், இந்திய ராணுவத்தின் இரண்டு பதுங்குகுழிகளை அழித்துள்ளது. சீன ராணுவத்தின் அத்துமீறலைத் தடுக்க, இந்திய ராணுவம் எல்லை மனிதச் சங்கிலியை அமைத்துள்ளது.


இரு நாட்டு எல்லையில் பதற்றம் அதிகரித்ததையடுத்து, கடந்த 20-ம் தேதி இரு நாட்டு ராணுவ அதிகாரிகளின் கொடிக் கூட்டம் நடந்தது. ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் இல்லை. குறிப்பாக, கைலாச மானசரோவர் புனித யாத்திரை மேற்கொள்பவர்களை சீன ராணுவம் தடுத்து நிறுத்தியுள்ளது. இதனிடையே, சீன ராணுவம் தொடர்ந்து அத்துமீறி வருவதால், எல்லையில் பதற்றம் அதிகரித்தது.


ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறுவதைப் போலவே, சிக்கிமில் சீனா அவ்வப்போது அத்துமீறிவருகிறது. முக்கியமாக,  2008-ம் ஆண்டு சீன ராணுவம் இந்திய ராணுவத்தின் பதுங்கு குழிகளை அழித்தது குறிப்பிடத்தக்கது.  

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close