Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

`சாதிய அடுக்குகள் தகர்த்தெறியப்பட வேண்டும்!'- எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மீரா குமார்

எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் மீரா குமார், 'சாதிய அடுக்குகளைத் தகர்த்தெறிந்து சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும்' என்று அறைகூவல் விடுத்துள்ளார். 

மீரா குமார்

காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் சார்பில் மக்களவையின் முன்னாள் சபாநாயகர் மீரா குமார் வரவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறார். பா.ஜ.க சார்பில் பீகார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தேர்தலுக்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக வலுவான போட்டியாளராக இருப்பார் என்ற எண்ணத்தில் மீரா குமார் நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மீரா குமார், 'ஜனநாயக மாண்புகள், அனைவரையும் அரவணைத்தல், சமூக நீதி மற்றும் சாதிய அடுக்குகளை தகர்த்தெறிதல் ஆகியவற்றை முன்னிறுத்திதான் நான் இந்தப் போட்டியில் இறங்குகிறேன். தலித்துகளுக்கு இடையில் நடக்கும் போட்டியாக இதைப் பார்க்கக் கூடாது' என்று கூறினார். சமீபகாலமாகத் தலித்துகள் மீது நடத்தப்படும் தாக்குதல் பற்றி கூறிய அவர், 'வெட்கப்பட வேண்டிய விஷயமாகவே தலித்துகள் மீதான தாக்குதலைப் பார்க்கவேண்டி இருக்கிறது' என்று தெரிவித்தார். 

அவர் மேலும், 'பீகார் முதல்வர் நிதிஷ்குமாரிடம் ஆதரவு கோருவதா என்பது பற்றி இதுவரை முடிவு செய்யப்படவில்லை. குஜராத்தில் இருக்கும் சபர்மதி ஆஸ்ரமத்தில் இருந்துதான் எனது பிரசாரத்தைத் தொடங்க உள்ளேன். மக்களவை சபாநாயகராகப் பதவி வகித்தபோது, நான் செயல்பட்ட விதம் குறித்து அனைத்து எம்.பி-க்களும் பாராட்டினர்' என்று கூடுதலாகத் தெரிவித்தார்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close