Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கூர்க்காலாந்து உடன்படிக்கையை எரித்து டார்ஜிலிங் மக்கள் போராட்டம்!

கூர்க்காலாந்து உடன்படிக்கையை எரித்து டார்ஜிலிங் மக்கள் தங்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 

கூர்க்காலாந்து

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் பெரும்பான்மையாக வாழும் கூர்க்கா இன மக்கள், நீண்டகாலமாகவே தனி மாநில உரிமை கோரி வருகின்றனர். இந்த நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாநிலம் முழுவதும் வங்காள மொழி கட்டாயம் என அறிவித்ததையடுத்து, கூர்க்கா மக்களின் போராட்டம் தீவிரமடைந்தது. கடந்த 15 நாள்களுக்கும் மேலாக நடைபெற்றுவரும் போராட்டத்தில், பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் நடந்தேறிவருகின்றன. 

இந்நிலையில் 2011-ம் ஆண்டு மேற்குவங்க அரசாங்கத்தால் கூர்க்கா மக்களுக்கான தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படுமென்ற உத்தரவை இன்று போராட்டக்காரர்கள் தீயிட்டுக் கொளுத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும், நகரின் முக்கியப் பகுதியில் குவிந்த மக்கள், தங்கள் உடம்பில் ட்யூப் லைட் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மிகுந்த ஆவேசத்துடன் இருந்த மக்களைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர். 

இப்போராட்டத்தின் மூலம் மேற்குவங்கத்துக்கும் தங்களுக்கும் இடையேயான உறவு முறிந்துவிட்டது என்றும், இனி என்றுமே மேற்குவங்க அரசுடன் சமாதானம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close