Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நடைபாதை பக்தர்களுக்கான இலவச லட்டு இனி ‘கட்’!

திருப்பதியில் பாதசாரி பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்த லட்டு இனிமேல் வழங்கப்படமாட்டாது என்று திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

லட்டு

திருப்பதி ஏழுமையான் கோவிலில் 2014-ம் ஆண்டு முதல் பாதயாத்திரையாக சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. லட்டு பிரசாதம் இலவசமாக வழங்கப்பட ஆரம்பித்த பின் பக்தர்களின் வருகை கணிசமாக உயர்ந்தது. இதையொட்டி பக்தர்களுக்கு வழங்கப்படும் இலவச லட்டு பிரசாதத்தை நிறுத்திவிடலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது. ஆனால், பக்தர்களின் பக்கமிருந்து எதிர்ப்புகள் அதிகரித்ததால் அம்முடிவு சில நாள்கள்முன் நிறுத்தி வைக்கப்பட்டது.

ஆனால், ஒவ்வொரு வருடமும் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த வண்ணமே இருந்தது. குறிப்பாக விடுமுறை நாள்களின்போது பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்காக மட்டும் 50 ஆயிரம் லட்டுகள் வரை இலவசமாக வழங்கப்பட வேண்டிய சூழல் உருவானது. இதனால் திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒரு நாளைக்கு ரூ.10 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது இலவச லட்டு பிரசாதத்தை நிறுத்திவிடலாம் என முடிவு செய்துள்ளது. 

புதிய திட்டத்தை உடனடியாக முழுவீச்சில் அமல்படுத்திவிட முடியாது என்பதால் தொடக்கத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இச்சேவையை நிறுத்திவிடலாமென தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close