Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஜி.எஸ்.டியை அமல்படுத்துவதில் ஏன் இந்த அவசரம்!'- கொதிக்கும் மம்தா பானர்ஜி

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, 'ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்த மத்திய அரசு ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறது' என்று கூறி, அதுதொடர்பாக வரும் ஜூன் 30-ம் தேதி நடக்கவுள்ள சிறப்புக் கூட்டத்தையும் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜி

இதுதொடர்பாக அவர் மேலும், 'எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரும் ஜூன் 30-ல் நடக்கவுள்ள ஜி.எஸ்.டி வரி தொடர்பான சிறப்புக் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் புறக்கணிக்க உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளனர். ஜி.எஸ்.டி வரி இவ்வளவு அவசரமாக அமல்படுத்துவது குறித்து எங்களுக்கு நிறைய அச்சம் உள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு செய்ததுபோல இதற்கும் மத்திய அரசு அவசரம் காட்டுகிறது. எங்கள் கட்சி முதலிலிருந்தே ஜி.எஸ்.டி-க்கு ஆதரவாகவே உள்ளது. ஆனால், இப்போது இது அமல்படுத்தும் முறை குறித்து எங்களுக்கு அச்சம் உள்ளது. ஜி.எஸ்.டி தொடர்பாக மக்களுக்கு இருக்கும் அச்சத்தைக் களைய கொஞ்சம் காலம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் தொடர்ச்சியாகக் கூறி வருவதற்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை' என்று குற்றம் சாட்டியுள்ளார் மம்தா பானர்ஜி. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close