Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2 நாள் சுற்றுப்பயணம்... குஜராத் செல்கிறார் மோடி!

2 நாள் சுற்றுப்பயணமாக, இன்று குஜராத்துக்கு செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

மோடி

இந்தியப் பிரதமர் மோடி, கடந்த 24-ம் தேதி அரசுமுறைப் பயணமாக போர்ச்சுக்கல் சென்றார். இதையடுத்து அமெரிக்கா சென்ற அவர், வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்து இரு நாட்டு உறவுகள்குறித்தும் விவாதித்தார். மேலும், அமெரிக்காவில் உள்ள முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் கலந்துகொண்ட மாநாட்டில் அவர் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து, அவர் நெதர்லாந்து சென்றார். நெதர்லாந்தில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட மோடி, நேற்று இந்தியா வந்தார்.

இதனிடையே, இன்று 2 நாள் சுற்றுப்பயணமாக குஜராத்துக்கு செல்கிறார். குஜராத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரண்டு நீர்த் திட்டங்களை அவர் தொடங்கி வைக்க உள்ளார். மேலும், புதிய தபால்தலை வெளியீடு, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார். குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த ஆண்டில் 4-வது முறையாக குஜராத் செல்கிறார் மோடி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close