Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாகிஸ்தான் தாக்குதல்: ராணுவ வீரர்கள் இருவர் காயம்!

ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில், வீரர்கள்  இருவர் காயமடைந்தனர்.

Poonch

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில், போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி, பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. நள்ளிரவு
1.30 மணி அளவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் அதற்கு பதிலடிகொடுத்தது. இதில், இந்திய ராணுவ வீரர்கள் இருவர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். இரு தரப்பினரிடையே, தொடர்ந்து சண்டை நடந்துவருகிறது. இதனால், எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close