Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தொடர் சரிவுக்குப் பின்னர், ஏற்றம் கண்ட இந்தியப் பங்குச்சந்தை!

தொடர்ச்சியாக சரிவைச் சந்தித்து வந்த இந்தியப் பங்குச்சந்தை இன்று மாலை உச்சத்தில் நிறைவடைந்துள்ளது.

பங்குச்சந்தை

உலகச் சந்தையில் நிலவிவரும் நிச்சயமற்ற தன்மை, இந்தியப் பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. இதனால், கடந்த ஒரு வாரமாக ஏற்ற இறக்கமாகவே இருந்துவந்த பங்குச்சந்தை, இன்றைய நாளின் இறுதியில் உச்சத்தில் நிறைவடைந்தது. இன்று மாலை வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 23.20 புள்ளிகள் உயர்ந்து, 30,857 புள்ளிகளாக நிறைவடைந்தது. அதே வேளை, தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 12.85 புள்ளிகள் உயர்ந்து, 9,504 புள்ளிகளாகி நின்றது.

ஜிஎஸ்டி மசோதா, வரும் ஜூலை 1-ம் தேதியிலிருந்து அமலுக்கு வருவதையொட்டி, வர்த்தகத்தில் பல பங்குகளின் மீதான முதலீடுகள் வரவேற்கத்தக்க வகையில் அமைந்துள்ளதால், இன்றைய வர்த்தகம் உச்சத்தில் நிறைவடைந்திருக்கலாம் என முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close