Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் டெபாசிட் குறைந்தது!

'சுவிஸ் வங்கியில் பணத்தைப் பதுக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


உலக அளவிலுள்ள பெரும் பணக்காரர்கள் அனைவரும் சுவிஸ் வங்கியில் பணத்தைப் பதுக்கிவருகிறார்கள். சுவிஸ் வங்கி, தன்னுடைய வங்கிக் கணக்காளர்களின் விவரங்களை வெளியிடுவதில்லை. அதனால், இந்தியாவிலுள்ள பெரும் பணக்காரர்களும் தங்களுடைய கறுப்புப் பணத்தை சுவிஸ் வங்கியில் பதுக்கிவருகின்றனர். சுவிஸ் வங்கியிலுள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தை மீட்க வேண்டும் என்று நீண்ட நாள்களாகக் கோரிக்கை எழுந்துவருகிறது.

தற்போது, சுவிஸ் வங்கியிலிருந்த இந்தியர்களின் பணம் கணிசமாகக் குறைந்துள்ளது. 2016-ம் ஆண்டு, சுவிஸ் வங்கியிலிருக்கும் இந்தியர்களின்  பணம்,  23 ஆயிரம் கோடி என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அது, கடந்த ஆண்டின் இறுதியில் 4,500 கோடியாகக் குறைந்துள்ளது.  சுவிஸ் தேசிய வங்கி, தற்போது இந்தப் புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. 1987-ம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் இத்தகைய புள்ளி விவரத்தை சுவிஸ் வங்கி வெளியிட்டுவருகிறது.  

அதன்படி, 30 ஆண்டுகளில் கடந்த ஆண்டுதான், இந்தியர்கள் பணம் போடுவது குறைந்துள்ளது என்று வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் தொடர் நடவடிக்கையில், பெரும் முதலாளிகள் தங்களது கறுப்புப் பணத்தை வேறு வங்கிகளில் பதுக்கியிருக்கலாம் என்று தெரிகிறது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close