Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜிஎஸ்டி அறிமுகக் கூட்டம்: எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு

நாடாளுமன்றத்தில், இன்று இரவு ஜிஎஸ்டி அறிமுக விழா நடைபெற உள்ளது. இந்த விழாவை, எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன. 


பல்வேறு எதிர்ப்புகளுக்கும் குழப்பங்களுக்கும் மத்தியில், இன்று நள்ளிரவு முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வர உள்ளது. இதன் அறிமுக விழாவை, மத்திய அரசு நடத்தத் திட்டமிட்டுள்ளது. இன்று இரவு நாடாளுமன்ற வளாகத்தில் இந்த விழா நடத்தப்பட உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி மற்றும் பா.ஜ.க. உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும், சில கூட்டணி கட்சியனரும், அமிதாப் பச்சன், பி.வி.சிந்து உள்ளிட்ட பிரபலங்களும் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.

இந்த விழாவில், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தற்போது பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக, பீகார் மின்சாரத்துறை அமைச்சர் விஜயேந்திர யாதவ் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தக் கூட்டத்தைப் புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளன.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close