Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

1962 போரைக் குறிப்பிட்டு எச்சரித்த சீனா.. பதிலடி கொடுத்த அருண் ஜெட்லி!

1962-ம் ஆண்டு நடந்த போரைக் குறிப்பிட்டு எச்சரிக்கை விடுத்த சீனாவுக்கு இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லி தக்க பதிலடி கொடுத்துள்ளார். 

arun jaitely
 

இந்தியா மற்றும் பூடான் எல்லைக்குள் சீனா அத்துமீறி நுழைந்து, சிக்கிம் செக்டாரில் சாலை கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. ’வரலாற்று பாடங்களை இந்தியா மறந்துவிடக்கூடாது. சிக்கிம் செக்டாரில் உள்ள ராணுவத்தை இந்தியா திரும்பப் பெற வேண்டும்’ என்று சீனா எச்சரிக்கைவிடுத்துள்ளது. ’வரலாற்று பாடம்’ என்று சீனா குறிப்பிட்டுள்ளது, 1962-ம் ஆண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்ட போரைப் பற்றித்தான் என்கிறது இந்திய பாதுகாப்பு அமைச்சகம். 

இந்நிலையில், சீனாவுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பேசியுள்ள அருண் ஜெட்லி ‘ சீனா பூட்டானின் நிலப்பகுதியை உரிமைக் கோருவதை பூடான் அரசு தெளிவுப்படுத்தியுள்ளது. இந்திய எல்லையை ஒட்டியுள்ள பூட்டானின் எல்லைப் பகுதியை சீனா ஆக்கிரமிக்க நினைக்கிறது. இந்தியாவும் பூட்டானும் எல்லைப்பகுதியைப் பாதுகாக்கும் உடன்படிக்கையை மேற்கொண்டுள்ளது. பாதுகாப்பு படைகளை இந்தியா திரும்ப பெறாது. சீனா 1962 போரை நினைவுப்படுத்தி இந்தியாவை எச்சரித்துள்ளது. 1962-ம் ஆண்டு இருந்த இந்தியா வேறு. இப்போது இருக்கும் இந்தியாவின் நிலை வேறு. 1962-ம் ஆண்டு சூழல் வேறு’ என்று குறிப்பிட்டுள்ளார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close