Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பகவத் கீதையும் ஜிஎஸ்டி வரியும்.- மோடி கூறிய உவமை!

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி அறிமுக விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 'இந்தியாவுக்குப் புதிய எதிர்காலம் துவங்கியிருக்கிறது' என்று கூறியுள்ளார். 

மோடி ஜி.எஸ்.டி

சரக்கு சேவை வரியை இந்திய நாட்டுக்கு அமலாக்கும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி,  “ இந்த அருமையான நள்ளிரவில் நாட்டின் பொருளாதாரத்தின் புதிய சித்தாந்தம் அமலாகிறது. பல கட்சிகளின் ஒத்துழைப்பு, 17ஆண்டுகால கூட்டுமுயற்சியின் பலனைத்தான் இன்று நாம் அடைய உள்ளோம். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, நாடாளுமன்றத்தில் பல்வேறு உறுப்பினர்கள் ஜிஎஸ்டி குறித்து பேசியுள்ளார்கள். பலகட்ட கூட்டங்கள் இதற்காக நடைபெற்றன. ஜிஎஸ்டி.பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுவது தவறானது. பள்ளிகளுக்கான பொதுத்தேர்வு ஆன்லைனில் வெளியிட்டபோது, என்ன மாதிரியான மனநிலையும் குழப்பமும் மக்களுக்கு இருந்ததோ, அதே நிலைதான் இப்போது அமலாக உள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறித்தும் மக்களிடம் உள்ளது. ஆனால், இது அமலான பிறகு, இதன் பலன்களை மக்கள் அறிந்துகொண்டு, இந்த குழப்பதிலிருந்து இன்னும் சில நாள்களில் தெளிவாகிவிடுவார்கள். நாட்டின் சுதந்திரத்துக்காக இதே போன்று நள்ளிரவில், இதே மண்டபத்தில்தான் அந்த சிறப்பான கூட்டம் நடைபெற்றது. அதேபோல, நாட்டின் வளர்ச்சிக்காக பொருளாதாரத்தின் புதிய அத்தியாயமும் இந்த நள்ளிரவில், அதே மண்டபத்தில் நடைபெறுவது பெருமைக்குறிய விஷயம்.

“பகவத் கீதை 18 அத்தியாயங்களைக் கொண்டது. அதுபோல, 18 முறை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று இப்போது ஜிஎஸ்டி.நடைமுறைக்கு வந்துள்ளது” என்ற உற்சாகத்தோடு உரையாற்றினார் பிரதமர் மோடி. மேலும், அர்த்தசாஸ்திரம் படைத்த சாணக்கியரின் சில குறிப்புகளையும் ஜிஎஸ்டி.வரிவிதிப்பில் நாங்கள் பயன்படுத்தியுள்ளோம்'' என்றும் மோடி குறிப்பிட்டுப் பேசினார். தொடர்ந்து பேசிய மோடி, “யாருடைய நலனையும் பாதிக்காத வகையில்தான் இந்த வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது. இந்தியாவின் பொருளாதாரா முன்னேற்றத்தில் இந்த வரிவிதிப்பு முறை ஒரு மைல்கல். கூட்டாட்சி தத்துவத்தைப் பேணும் இந்தியாவில், இந்த வரிவிதிப்பு ஒரு சாதனைதான் என்றார்.

ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையால், கறுப்புப் பணம் மற்றும் ஊழல் பணம் கட்டுப்படுத்தப்படும். நாட்டின் எதிர்கால நலனை இந்த நள்ளிரவில் முடிவுசெய்ய இருக்கிறோம். சாதாரண வியாபாரிகளுக்கு இந்த வரிவிதிப்பினால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஜிஎஸ்டி வரிவிதிப்பினால் நாட்டின் முன்னேற்றமும் பொருளாதார வளர்ச்சியிலும் இனி புது உத்வேகத்தைப் பெறும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை” என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close