Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எதிர்க்கட்சி கூட்டணியில் பிளவா? காங்கிரஸ் அதிர்ச்சி

 ஜிஎஸ்டி வரிக்கான நள்ளிரவு விழாவை காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்திருந்த நிலையில் அதன் மற்ற கூட்டணி கட்சிகள் விழாவில் பங்கேற்றது காங்கிரஸுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. 

GST Event


நாடு முழுவதுக்கும் ஒரே வரியான ஜிஎஸ்டி வரி நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதற்கான விழா நேற்று நாடாளுமற்றத்தில் நடந்தது. அவரச கதியில் ஜிஎஸ்டி யை அமல்படுத்துவதாகக் கூறி காங்கிரஸ் கட்சி விழாவைப் புறக்கணிப்பது என்று முடிவு செய்தது. திமுகவும் அதே நிலைப்பாட்டை எடுத்தது. இவர்களுக்கு முன்பாகவே திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என்று அறிவித்தது. 
இந்நிலையில், இந்த நிகழ்வில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, பிஜு ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகள் பங்கேற்றது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. குடியரசு தலைவர் தேர்தலில் தனக்கு 17 கூட்டணி கட்சிகளின் ஆதரவு உள்ளதாக தெரிவித்திருந்தார் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மீராகுமார். அதில் பெரும்பாலான கட்சிகள் பா.ஜ.க வின் அழைப்பை ஏற்று விழாவில் பங்கேற்றது தற்போது முக்கியத்துவம் பெறுகின்றது. 
இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் கூறிகையில், முதலிலிருந்தே ஜிஎஸ்டி வரி முறையை நாங்கள் ஆதரித்து வந்துள்ளோம். அதனால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாகத் தெரிவித்தார். 
காங்கிரஸ் தங்களது புறக்கணிப்பு முடிவு பற்றி கூட்டணி கட்சிகளுக்குத் தெரிவித்திருந்தபோதும் பல கட்சிகள் அதில் கலந்துகொண்டது நிச்சியம் அதிர்ச்சி அளிக்கும். குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க-க்கு கடுமையான போட்டி அளிக்க வியூகம் வகுத்திருந்த நிலையில்  கூட்டணி கட்சிகளுக்கிடையே பிளவு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விளும் எழுந்துள்ளன. குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என்பதால் அதில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வெற்றி பெற காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது. 
முன்னாள் பிரதமர் தேவ கௌடா விழாவில் பங்கேற்றதும் காங்கிரஸ் தரப்பிலிலிருந்து கவனிக்கப்படுகிறது. கர்நாடக சட்டப்பேரவை இன்னும் ஓர் ஆண்டுக்குள்ளாகத் தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை காங்கிரஸ் எதிர்பார்க்கவில்லை என்றே கூறுகிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close