Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

1947... 2017... மம்தா ஆவேசத்துக்கு இதுதான் காரணம்!

’நாட்டின் சுதந்திரத்தையும்  ஜனநாயகத்தையும் ஜிஎஸ்டி மூலம் சவக்குழிக்குள் தள்ளிவிட்டது அரசு’ என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

மம்தா பானர்ஜி

நாடு முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒற்றை வரி முறையான ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை, நள்ளிரவு சரியாக 12 மணிக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தப் புதிய வரிவிதிப்பு முறை, நாட்டில் உள்ள பல தரப்பினரையும் பாதிக்கும் எனப் பல அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துவந்தனர். இந்த வரிசையில், தற்போது மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியும் மத்திய அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

ஜிஎஸ்டி குறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், ‘‘சிறு, குறு வணிகர்களை அதிக அளவில் பாதிக்கக்கூடிய நடைமுறைகளுடன் ஜிஎஸ்டி அமலுக்கு வந்துள்ளது. இந்தப் புதிய வரிவிதிப்பு குறித்து மோடி பெருமையாகக் கூறுகிறார். 1947-ம் ஆண்டு, ஒரு நள்ளிரவில்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது என்றும், அதே போன்றதொரு நள்ளிரவில் ஜிஎஸ்டி அமலுக்கு வந்துள்ளது என்றும் கூறியுள்ளார். ஆனால் உண்மையில், 1947-ம் ஆண்டு நள்ளிரவில் சுதந்திரம் பெற்று ஜூன் 30-ம் தேதி 2017-ம் ஆண்டு சவக்குழியில் புதைத்துள்ளது இந்தியா’’ என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close