Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுல் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் விரைந்து பதிலளிக்க வேண்டும் என டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சோனியா- ராகுல்

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வெளியிட்ட The Associated Journals Limited என்ற தாய் நிறுவனம் மற்றும் அதன் சொத்துகள், உடைமைகள் ஆகியவை Young Indian என்ற கம்பெனியால் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிறுவனத்தில் சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவருக்கும் நான்கில் மூன்று மடங்கு பங்குகள் உள்ளன. நேஷனல் ஹெரால்டுக்குச் சொந்தமான 5,000 கோடி ரூபாய் சொத்துகளைக் கையகப்படுத்தும் நோக்கிலேயே சோனியா, ராகுல் ஆகிய இருவரும் இந்தப் பங்கு பரிவர்த்தனையை மேற்கொண்டார்கள் என்று சுப்பிரமணியன் சுவாமி குற்றம் சுமத்தினார்.

மேலும், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி டெல்லி நீதிமன்றத்தில் 2012-ம் ஆண்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், 'நேஷனல் ஹெரால்டு நிறுவனத்துக்குக் கோடிக்கணக்கில் கடன் இருந்தது. இந்தத் தொகையைக் காங்கிரஸ் கட்சியின் பணத்திலிருந்து வட்டியின்றி கொடுத்து, விதிமுறைகளை மீறி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் அடைத்தனர். அதற்குப் பதிலாக நேஷனல் ஹெரால்டு நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துகளை அபகரித்துள்ளனர்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் தொடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துணைத்தலைவர் ராகுல் காந்தியும் விரைந்து பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்த வழக்கு விசாரணை ஜூலை 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close