Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பைகுல்லா சிறையில் பெண் கைதி கொலை... 6 பெண் காவலர்கள் கைது!

மும்பை பைக்குல்லா சிறையில் பெண் கைதி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், 6 பெண் காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பைக்குல்லா சிறை கைது

கடந்த 23-ம் தேதி, மும்பை பைக்குல்லா சிறையில் மஞ்சுளா ஷெட்டி என்பவர் உயிரிழந்தார். சிறை காவலர்கள் தாக்கியதில்தான் அவர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து பைக்குல்லா சிறையில் உள்ள 200க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் சிறைக் காவலர்களைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது சிறைக்குள் கலவரமாக வெடித்தது. 

இந்நிலையில் பெண் கைதி கொலை வழக்கில், 6 பெண் காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மும்பை போலீஸாரால் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். மேலும் இவ்வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே  பெண் கைதிகளின் போராட்டத்தைத் தூண்டியதாக, ஷீனா போரா கொலை வழக்கில் சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close