Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விமான நிலையத்தில் அமித்ஷா பொதுக்கூட்டம்: காங்கிரஸ் கண்டனம்!

பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா-வை வித்தியாசமாக வரவேற்கிறோம் என்ற பெயரில் கோவா மாநிலத் தொண்டர்கள் விமான நிலையத்தில் ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தால் ஆளுங்கட்சி கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.

அமித் ஷா

பிரதமர் மோடியைத் தொடர்ந்து பா.ஜ.க.-வின் தேசியத் தலைவர் அமித் ஷா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கோவா சென்றார். நேற்று கோவா விமான நிலையத்தில் கட்சியின் தலைவரை வரவேற்க கட்சியினர் அதிகளவில் கூடியிருந்தனர். கோவா விமான நிலையத்திலேயே வரவேற்பு நிகழ்ச்சியை பொதுக்கூட்ட நிகழ்ச்சியாக மாற்றினர் அம்மாநில பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள். 

விமான நிலையத்திலேயே பொதுக்கூட்டம் நடத்துவது போன்று சிறிய அளவிலான விழா மேடை அமைக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமித் ஷா உரை நிகழ்த்தினார். விழாவில் அமித் ஷா உடன் கோவா மாநில முதல்வர் மனோகர் பரிக்கரும் கலந்து கொண்டார். இந்த விழாவே தற்போது அதிகளவிலான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘அதிகார துஷ்பிரயோகம்’ என இதை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், இதுதொடர்பான விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close