Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விடாமல் துரத்தும் கும்பல்... ஆசிட் வலிகளை கடக்க முயலும் உ.பி பெண்!

உத்தரப்பிரதேசத்தில் உள்ள ரேபரேலி பகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் மீது மர்ம நபர்கள் இரண்டாவது முறையாக ஆசிட் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

acid attack survivor
 

பாதிக்கப்பட்ட பெண், ரேபரேலி என்னும் பகுதியில் வசித்து வந்துள்ளார். அவருக்கு இரண்டு குழந்தைகள்.  கடந்த 2008 ஆம் ஆண்டு நிலத்தகராறு காரணமாக அதே ஊரை சேர்ந்த 2  பேர் இந்த பெண்ணை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அந்த பெண், பலாத்காரம் செய்தவர்களை காவல்துறைக்கு அடையாளம் காட்டினார்.  இது தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீதான விசாரணை இன்னும் முடியவில்லை.  இதனையடுத்து அதே பெண்னை 2012 ஆம் ஆண்டு மர்ம நபர் கத்தியால் தாக்கியுள்ளார். காயங்களுடன் அந்த பெண் உயிர்தப்பினார். அடுத்து 2013இல் அந்த பெண் மீது ஆசிட் வீசப்பட்டது. அப்போதும் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் அவர் உயிர் தப்பினார். இந்த தாக்குதல்கள் அனைத்துமே இவரின் நிலத்தை அபகரிக்க நினைப்பவர்கள்தான் நடத்தினார்கள் என்று அவரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். 

இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் லக்னோவில் ரயிலில் வந்து கொண்டிருந்த அந்த பெண்ணை ஆசிட் குடிக்க சொல்லி இரண்டு பேர் கட்டாயப்படுத்தினர், மறுத்த அப்பெண்ணின் வாயில் வலுக்கட்டாயமாக ஆசிட் ஊற்றியுள்ளனர். அந்த பெண் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மீண்டு வர சுமார் இரண்டு மாதம் ஆகியுள்ளது. அந்த பெண்ணை உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார். ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். அந்த பெண்ணை மீண்டும் மீண்டும் தாக்கும் அந்த கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டார். அந்த பெண் காவல்துறை பாதுகாப்புடன் விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டார். இவவ்ளவு நடந்த பிறகும் அந்த பெண்ணை விடாமல் துரத்திய அந்த கும்பல், விடுதி வாசலில் வைத்து அந்த பெண்ணின் முகத்தில் மீண்டும் ஆசிட் வீசியுள்ளது. அந்த பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான 45 வயது பெண்ணை சுமார் ஆறு ஆண்டுகளாக துரத்தி துரத்தி சித்ரவதை செய்யும், அந்த கும்பலுக்கு எதிராக  காவல்துறை நடவடிக்கை எடுக்காமல்  இருப்பது வருத்தமளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close