Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'சமுதாயத்தைக் காக்க மக்கள் தயாராக வேண்டும்': ஜனாதிபதி பிரணாப் வேண்டுகோள்!

’சமுதாயத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளைக் காக்க மக்கள் தயாராக வேண்டும்’ என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாட்டு மக்களிடன் வேண்டுகோள் வைத்தார்.

பிரணாப் முகர்ஜி

டெல்லியில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்துகொண்டு பேசிய இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், ‘பசுவை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் நாட்டில் மக்கள் படுகொலைகள் அதிகரித்து காணப்படுகிறது. இந்த பிரச்னை கவலை அளிக்கும் விதமாகவே உள்ளது. ஒரு கருத்து ஒரு விதமான கும்பல் மனப்பான்மையுடன் அணுகப்பட்டு, ஏற்கப்படும் போது அதை எதிர்க்க வேண்டும். இதன் மூலம் நாம் வாழும் சமூகத்தின் அடிப்படைக் கட்டமைப்பை பாதுகாக்க முடியும். இம்மாதிரியான ஒரு நிகழ்வுக்கு மக்கள் தயாராக வேண்டும்’ என்றார்.

மாட்டிறைச்சி விவகாரத்தையும், அதையொட்டிய வன்முறைச் சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டு பேசினார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. மேலும் அவர் கூறுகையில், ‘மக்கள் யாரும் சமுதாயம் சார்ந்த பொறுப்புகளிலிருந்து விலகவும் முடியாது, அதைத் தட்டிக்கழிக்கவும் முடியாது. மக்களுடன் இணைந்து ஊடகங்களும் சமூகப் பொறுப்பை ஏற்றுச் செயல்பட வேண்டும்’ என அறிவுறுத்தினார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close