Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இப்போதுவிட முன்புதான் கொலைச் சம்பவங்கள் அதிகம் நடைபெற்றன!'- அமித் ஷா கருத்து

பா.ஜ.கவின் தேசியத் தலைவர் அமித் ஷா, 'தற்போது நாட்டில் நடப்பதைவிட முன்னர் ஆட்சியிலிருந்த அரசாங்கத்தின் கீழ்தான் அதிக கொலைகள் நடைபெற்றன' என்று கூறியுள்ளார். 

அமித் ஷா

பா.ஜ.க தலைமையேற்ற பின் நாடு முழுவதும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் அதிகரித்துவிட்டதாக அதிகம் பேசப்பட்டு வந்தது. இதையொட்டி அமித் ஷா, 'நான் தற்போது நடக்கும் கொலைகளைப் பற்றி குறைத்து மதிப்பிட விரும்பவில்லை. ஆனால், இப்போது நடக்கும் கொலைச் சம்பவங்களைவிட  கடந்த 2011,2012,2013 ஆம் ஆண்டுகளில்தான் அதிக கொலைகள் நடைபெற்றன. பா.ஜ.க தலைமையேற்ற கடந்த மூன்று ஆண்டுகளைவிட முன்னர் ஒவ்வொரு ஆண்டுகளிலும் நடந்த கொலைச் சம்பவங்கள் அதிகம். ஆனால், அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை. இதுவரை நடந்த கொலைகளுக்கு கைது நடவடிக்கை நடக்காமல் இருந்துள்ளதா? சட்ட ஒழுங்கு என்பது மாநில அரசின் கையில்தான் இருக்கிறது. ஆனால், போராட்டம் நடைபெறுவது என்னவ்வோ டெல்லியில். இது என்ன நடைமுறை' என்று கேள்வி எழுப்பியுள்ளார்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close