Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு: ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெடித்தது மக்கள் போராட்டம்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் ஊடுருவல் அதிகரித்து வருவதை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

காஷ்மீர்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியான ஹஜிராவில் மக்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். பாகிஸ்தானுக்கு எதிராக தாங்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையோரத்தில் அமைந்துள்ள ஹஜிரா தற்போது பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் பகுதியின் மூலமாகத் தான் தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவ அனுமதிப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர் தீவிரவாதத் தாக்குதல்கள், ஊடுருவல்கள், வன்முறைச் சம்பவங்கள் என இப்பகுதி மக்களின் அன்றாட நடைமுறை வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளான மக்கள் பாகிஸ்தான் ராணுவத்தையும், அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரிப்பையும் எதிர்த்து இப்போராட்டத்தில் இறங்கியுள்ளதாகக் கூறுகின்றனர். ‘இனிமேல் நாங்கள் இதுபோல் கஷ்டங்களை அனுபவிக்கத் தயாராக இல்லை. பாகிஸ்தானை தூக்கி எறியத் துணிந்துவிட்டோம்’ என கோஷங்களை எழுப்பி வருகின்றனர் ஹஜிரா மக்கள்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close