Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிரதமர் நரேந்திர மோடி இளைஞர்களுக்காகப் புத்தகம் எழுதப்போகிறார்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இளைஞர்களுக்காக இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு புத்தகம் எழுதி வெளியிடப் போகிறாராம். 

நரேந்திர மோடி

மாதம் ஒரு முறை பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலி மூலம் 'மன் கீ பாத்' என்ற நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்நிலையில், இளைஞர்களுக்கான ஒரு புத்தகத்தை இந்தாண்டு இறுதிக்குள் பிரதமர் மோடி எழுதி வெளியிட உள்ளார். இந்தப் புத்தகத்தின் மூலம், தேர்வு நேரத்தில் இளைஞர்கள் எப்படி மன அழுத்தத்திலிருந்து வெளிவருவது, எப்படி நிலையான தன்மையில் இருப்பது மற்றும் தேர்வுகள் முடிந்த பின்னரும் என்ன செய்ய வேண்டும் போன்ற விஷயங்கள் குறித்து விரிவாக எழுதவுள்ளாராம். பென்குயின் ராண்டம் ஹவுஸ் பதிப்பகம் இந்தப் புத்தகத்தைப் பல இந்திய மொழிகளில் வெளியிட உள்ளதாம். இந்தப் புத்தகத்தில் மாணவர்களுக்கு நெருக்கமான பல விஷயங்கள் பற்றி மோடி எழுதப் போகிறாராம். இந்தப் புத்தகத்தின் வாயிலாக மோடி, மாணவர்களின் நண்பராக முடியும் என்று நம்பிக்கை வைத்துள்ளார் என்று பதிப்பகத்தினர் கூறியுள்ளனர்.

'என் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒரு விஷயத்தைப் பற்றி நான் எழுதவுள்ளேன். இந்த விஷயம் நாட்டை வழி நடத்தப்போகும் இளைஞர்களின் அடிப்படையை வைத்தே அமையும்' என்று மோடி கூறியுள்ளதாகப் பதிப்பகத்தினர் தெரிவித்துள்ளனர். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close